சூறையாடிய இஸ்ரேலிய ராக்கெட்கள்..!முற்றிலும் உருக்குலைந்த காசா நகரம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ
இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி முழுவதும் சிதைந்துள்ள பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர்
கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதையடுத்து உடனடியாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து செயல்படும் இடம் என தெரிவித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக ராக்கெட் தாக்குதலை நடத்தியது.
சிதைந்த காசா நகரம்
காசா நகரத்தில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டதுடன், இஸ்ரேலிய ராக்கெட்டுகள் காசா நகரம் முழுவதையும் சூறையாடியது.
Drone footage of Gaza after the airstrikes
It’s going to take years to remove all the rubble and ruins pic.twitter.com/NN5Xz8Gc0L
— Visegrád 24 (@visegrad24) October 11, 2023
இந்நிலையில் இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காசா நகரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலால் காசா நகரில் ஏற்பட்ட இந்த இடிபாடுகளை முழுவதுமாக அகற்றி முடிக்க ஒரு வருட காலமாவது தேவைப்படும் என தெரியவந்துள்ளது.
CNN released a report from Gaza, showing footage of the destroyed Rimal neighborhood in the center of the city. pic.twitter.com/oFvED6X61y
— NEXTA (@nexta_tv) October 11, 2023