நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான நடவடிக்கை
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான வரைவு திட்டம் ஒன்று ஏற்கனவே உருவாக்கப்பட்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான யோசனை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியோ எந்த ஒரு வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாகவும், இறுதியில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான யோசனை முன் வைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றம் மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் நிறைவேற்நு அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது குறித்து உள்ளக பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.