இலங்கையில் இன்றிரவு தொடர்பில் இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் பல பகுதிகளில் இன்று இரவு (12-10-2023) இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழைப் பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
மேலும், நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களனி கங்கை, களு கங்கை, கிங் கங்கை, நில்வளா கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக களனி கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், மழையுடனான காலநிலை காரணமாக கொத்மலை மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.