ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் – பனி சிகரங்களில் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி!
ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி
உத்தராகண்ட், ஜியோலிங்காங் கிராமத்தில் கைலாஷ் மலையில் சிவன்-பார்வதி கோயில் அமைந்துள்ளது. அதன் 50 கி.மீ. தொலைவில் புனித கைலாஷ் மலை உள்ளது.
சிவன்-பார்வதி கோயிலில் இருந்தே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள புனித கைலாஷ் மலையை தரிசிக்க முடியும். இந்நிலையில், அந்த கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார்.
சிறப்பு வழிபாடு
உள்ளூர் பாரம்பரிய உடை அணிந்து, உடுக்கை அடித்து சிவன், பார்வதியை வழிபட்டார். பின் புனித கைலாஷ் மலையை நோக்கி அமர்ந்து தியானம் செய்தார். சுமார் 25 நிமிடங்கள் அவர் பூஜை, வழிபாடுகளை செய்தார்.
அதன்பின், குன்ஞ் பகுதிக்கு சென்று ராணுவ முகாமில் வீரர்களையும், தொடர்ந்து கிராம மக்களையும் சந்தித்துப் பேசினார். அதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் ஜோகேஸ்வருக்கு சென்று சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும், பித்தோராகர் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ரூ.4,200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.