தமிழகம் TO இலங்கை கப்பல்: இந்த நாள் மட்டும் பயணக் கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் பயணம் அக்டோபர் 14 -ம் திகதி துவங்க உள்ள நிலையில் நாளை மட்டும் பயணக்கட்டணத்தில் 75% சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கப்பல்
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. பின்பு, தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சி நடைபெற்றது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம்.
பயணக்கட்டணம் குறைவு
இதற்கான பயண கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 6500 மற்றும் 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டுள நிலையில், துவக்க விழாவை முன்னிட்டு 75% சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, நாளை அக்டோபர் 14 -ம் திகதி மட்டும் ரூ.2,375 மற்றும் 18% ஜிஎஸ்டி வரியுடன் நபர் ஒருவருக்கு ரூ.2,803 பயண கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 30 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது, பயணக் கட்டணத்தில் சலுகை அறிவிப்பால் அதிகமானோர் முன்பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.