நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு
சூரியனின் பரப்பளவில் 50% பகுதியை உள்ளடக்கும் பெரிய சூரிய கிரகணம் நாளை (14) நிகழவிருக்கிறது.
நாளை (14) காலை 11:46 மணிக்குத் ஆரம்பமாகி, மதியம் 1:07 மணிக்கு கிரகணம் அதன் உச்சத்தினை அடைந்து பின்னர் படிப்படியாக குறையும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் பெரிய சூரிய கிரகணம் இது என்பதால் இதனை வளைய கிரகணம் அல்லது நெருப்பு கிரகண வளையம் என வானியலாளர்கள் அழைக்கிறார்கள்.
இறுதி சூரிய கிரகணம்
அமெரிக்காவின் தென் மேற்கு மற்றும் மேற்கு கடற்கரைபகுதிகளில் உள்ளவர்கள் இந்த அற்புத காட்சியை காண முடியும் என்று கூறப்படுகிறது.
ஓஹியோவில், சந்திரன் சூரியனை மேலும் மேலும் மறைக்கத் தொடங்கும் போது, மரங்களின் கீழ் நிழல்கள் மாறுவதைக் காணக்கூடியவாறு இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை ஓஹியோவில் தோன்ற இருக்கும் சூரியனை முழுமையாக மறைக்கும் இந்த பெரிய சூரிய கிரகணமானது இந்த நூற்றாண்டுக்கான இறுதி சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த கிரகணத்தின் பொது, ஒரு இருள் சுவர் மணிக்கு 1,000 மைல் வேகத்தில் உங்களை நோக்கி வருவதை இந்த கிரகணம் உணர வைக்கும் என்று கூறப்படுகிறது.
பகலில் நடக்கும் இந்தநிகழ்வின் போது சூழல் முற்றிலும் வெப்பத்தை கக்கிக்கொண்டு இருக்கையில் குளிர்மையுடன் இருளும் சூழ்கின்ற வித்தியாசமான மாற்றங்களை இந்தக் கிரகணம் தோற்றுவிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.
இந்த மாற்றத்தால் விலங்குகள் வித்தியாசமாக செயற்படும் என்றும் வானியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் இதனால் அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பணித்திருக்கிறார்கள்.
இந்த கிரகணத்தை சாதாரண வெற்றுக்கண்ணால் பார்வையிடுவதும், சன்கிளாஸ்களைப் பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது, கதிர்வீச்சுத் தாக்கம் அதிகரித்திருப்பதனால் உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கிரகணத்தை பார்வையிடும் படி பொதுமக்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.