178 வருடங்களுக்கு பின்னர் அமாவாசை தினத்தில் வானில் ஏற்படவுள்ள நிகழ்வு : இலங்கையில் பார்க்க முடியுமா..!
178 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் இன்று இரவு நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஆண்டின் கடைசி சூரியகிரகணமும் இதுவாகும்.
இலங்கை நேரப்படி இரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை கிரகணம் நிகழ உள்ளது.
இலங்கையில் காண இயலாது
எனினும் இலங்கையில் இதனைக் காண இயலாது. அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிக்கோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை நெருப்பு வளையமாக காண முடியும்.
இதனை நாசா நேரடி ஒளிபரப்பு செய்கிறது.