அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமானால் மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது
சிறிலங்காவில் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
அதிபர் தேர்தல்
“தேர்தல் முறைமையில் மாற்றம், தேர்தலை ஒத்திவைத்தல், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் எம்முடன் எவரும் கலந்துரையாடவில்லை.
வேறு எங்கும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரியவில்லை. எதிரணி தரப்பில் இருந்துதான் இப்படியானதொரு கதை வந்துள்ளது.
அதிபர் தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமனால் அதற்கு நான் உட்பட பலர் ஆதவு வழங்கமாட்டோம். இதற்கான தேவைப்பாடும் அரசுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன்.
உள்ளூராட்சி சபை தேர்தலை முறைமையை மாற்றபோய் என்ன நடந்தது, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது தேர்தலே இல்லாமல்போயுள்ளது” – என தெரிவித்தார்.