நீரால் மூழ்கிய பண்டாரவளை
மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நுவரெலியா – பண்டாரவளை பகுதியில் கன மழை காரணமாக கடும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு அப் பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வௌ்ளநீர் உட்புகுந்துள்ளது.