இலங்கை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பல்
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை சிறிலங்கா கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.
இந்தோனேசிய கடற்படைப் பயிற்சிக் கப்பலானது 95 பயணிகளால் நிர்வகிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
இன்று நாட்டை விட்டு வெளியேறும்
இதேவேளை குறித்த கப்பல் நாட்டில் நங்கூரமிட்டிருக்கும் காலப்பகுதியில் கப்பலின் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘KRI Bima Suci – 945’ கப்பல் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று (15) மாலை நாட்டைவிட்டு வெளியேறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.