எல்பிட்டியவில் தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
எல்பிட்டிய – தம்புலு உயன பகுதியில், ஒன்பது மாத குழந்தையொன்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கை மற்றும் கால்கள் செயலிழந்துள்ளதாக அதன் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரிக்கு இது குறித்து பெற்றோர் தெரியப்படுத்தினர்.
தடுப்பூசி செலுத்திய பின்பு
இதன்போது ஐநூறு குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோன்று நடக்கலாம் என வைத்தியர் குறிப்பிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
எனினும், தமது குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருந்ததாகவும், தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே, அதன் உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும் பெற்றோர், குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.