யாழில் அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாள் விழா!
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92 வது பிறந்த தினம் இன்றையதினம் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.
யாழ்.பொது நூலகத்தில் இந்தியன் கோனர் பகுதியில் அமைந்துள்ள அப்துல் கலாமின் சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், தலைமை நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் போது, யாழ்ப்பாண பொது நூலகத்தில் Dr. A. P. J அப்துல் கலாமின் மார்பளவு திருவுருவச் சிலையை நிறுவிய இந்திய அரசுக்கு யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் ஜெயசீலன் நன்றி தெரிவித்தார்.