இஸ்ரேலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நேற்றைய தினம்(14) இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வகையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் ஜோர்தானுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
“இவர்களது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் இன்றும் (15) நாளையும் (16) துல்லியமான தகவல்கள் தேடப்படும்.
உங்கள் உறவினர் அல்லது நண்பர்கள் சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு வருவதை தடுத்து நிறுத்துங்கள்.” என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.