இலங்கை வங்கி ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்
இலங்கை வங்கி ஊழியர் சங்கமானது முக்கியமான அறவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அவ்வகையில், ஆறு அரச வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக அரச வங்கி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச வங்கிச் சட்டம்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இதன்படி, தற்போதைய அரச வங்கிச் சட்டம் நீக்கப்படும்.
இந்த ஆறு வங்கிகளில் உலகின் முப்பது பெரிய அரச வங்கிகளில் இரண்டு வங்கிகளும் உள்ளன.
அரச வங்கிகள் இலாப நோக்குடன் நிறுவப்படவில்லை, மாறாக அவை, தொலைதூர கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவப்பட்டது.
இந்த விடயத்திற்கு எதிராக மக்களுடன் இணைந்து பாரிய தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.” என்றார்.