நிதி மோசடியில் ஈடுபட்ட அரச ஊழியர் பணி இடைநிறுத்தம்
கண்டி மாநகரசபையின் உதவி முகாமையாளர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாநகரசபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த ஊழியர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை வர்த்தக நிலையங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 8,277,600 ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணி இடைநிறுத்தம்
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்று மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த குழுவின் பரிந்துரைக்கமைய முகாமையாளர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.