மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர்: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதிலும் காணப்படும் கைத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் டீசல் தொகையை வரையறுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய வளக்கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய ஒயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகத்தில் மாற்றம்
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எவ்வாறு எனினும் சினோபெக் நிறுவனத்திற்கு அவ்வாறு எவ்வித அறிவுறுத்தல்களையும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய போது அறிமுகம் செய்யப்பட்ட கியூ ஆர் முறைமை புதிய பொலிவுடன் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்காத வகையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் ஓர் பொறிமுறையை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்கு என தெரிவிக்கப்படுகிறது.