யாழ். சிறைச்சாலையில் தீவிரமாக பரவும் கண் நோய்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் அதிகமான கைதிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைத் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.