நகர்புற மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமைகள் தொடர்பில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மழையுடனான வானிலை
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால், தீவின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக எஸ்.பி.சி.சுகீஸ்வர குறிப்பிட்டுள்ளார்.