;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக மே18 நினைவுத்தூபியை அகற்ற மீண்டும் முயற்சி

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே-18 நினைவுத்தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் முதல் கட்டமாக இந்தத் தூபியை அமைப்பது தொடர்பில் செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள் மற்றும் பெறப்பட்ட அனுமதிகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள்
இவர் மீதான விசாரணைகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு தரப்பும் அந்த தூபியை அகற்றுவதற்கான நகர்வை மேற்கொண்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

இந்தத் தூபியை முறையான அனுமதிகள் எதுவும் இன்றி கட்டப்பட்டதாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடித்து அகற்றப்பட்டிருந்தது.

எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்களின் காரணமாக அதனை அவ்விடத்தில் அமைப்பதற்கு அப்போதே அதிபரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகமோ எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காத நிலையில் அந்த தூபி மீண்டும் அமைக்கப்பட்டு வருடம்தோரும் மே-18 நிகழ்வுகள் பல்கலைக்கழக சமூகத்தால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் இதன் உண்மைத் தன்மையை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.