வெடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் இருந்து வெளியேறிய 10 லட்சம் மக்கள்
தாக்குதலுக்கு உள்ளாகும் காசாவில் இருந்து இதுவரை 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
10 லட்சம் பேர் இடம்பெயர்வு
ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போரானது 10 வது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து பதிலடி தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகரை முற்றிலும் உருகுலைத்து வருகிறது.
இதனால் பெரும்பாலான காசா நகர மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், போர் தொடங்கியது முதல் 7 நாட்களில் மட்டும் இதுவரை 10லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா இதுகுறித்து தெரிவித்த தகவலில், காசாவில் போர் தொடங்கியது முதல் 7 நாட்கள் வரை மட்டும் இதுவரை 1 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர் எனத் குறிப்பிட்டுள்ளார்.