வீடுகளைத் துவம்சம் செய்த யானைகள்; தெய்வாதீனமாக தப்பிய குடும்பத்தினர்!
மட்டு. வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல்லூரில் குடியிருப்பு பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் உள்நுழைந்த காட்டு யானைகள் வீடுகளைத் துவசம் செய்துள்ளன.
இதனால், இரண்டு வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. யானைகள் வீடுகளை இடித்து வீழ்த்திய நேரத்தில் தாங்கள் உறக்கத்தில் இருந்ததால் தெய்வாதீனமாக உயிர்தப்பியதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுயானை, தென்னை, மா, வாழைமரம் போன்ற மரங்களை முறித்துச் சேதப்படுத்தியுள்ளது.
யானைகள் இரு வீடுகளைத் தாக்கி உடைத்தபோது, உறக்கத்தில் இருந்த 2 மாதக் குழந்தை, தாய் மற்றும் அடுத்த வீட்டில் உறக்கத்தில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட்ட குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பி அங்கிருந்து ஓடியுள்ளனர்.