கொழும்பில் வெள்ளத்தில் மூழ்கும் பல நகரங்கள் : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொழும்பில் 10 நிமிடங்கள் மழை பெய்தால் பல நகரங்கள் நீரில் மூழ்கிவிடுவதாக மக்கள் சுமத்தியுள்ளனர்.
கடந்த நாட்களாக 5 நிமிடங்கள் பெய்த மழையிலேயே நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆமர் வீதி உள்ளிட்ட பல பகுதிகள் நேற்றைய தினம் நீரில் மூழ்கியதால் பணிக்கு செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
மழை வெள்ளம்
இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 15 நிமிடங்கள் பெய்த மழையால் பிற்பகல் 2 மணி வரை வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல தசாப்த்தங்கள் மக்கள் இவ்வாறு நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் உடனடியாக தீர்வு வழங்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.