இலங்கை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் டேவிட் கமரூனின் கருத்து
இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தோ பசுபிக்கில் சீனா ஆழமாக காலடி பதிப்பதற்கு உதவலாம் என்ற கரிசனைகளிற்கு மத்தியில் இலங்கையில் சீனா நிதியுதவி உடனான துறைமுகநகரத்தை ஊக்குவித்தமைக்காக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
கொழும்பு துறைமுகநகரத்திற்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அந்த திட்டம் குறித்து உரையாற்றுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் டேவிட் கமரூன் மத்தியகிழக்கிற்கு சென்றார் என பொலிட்டிக்கோ தெரிவித்துள்ளது.
சீனாவின் சர்வதேச உட்கட்டமைப்பு திட்டமாக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய பகுதி இந்த கொழும்பு துறைமுக நகரம்.சிங்கப்பூருக்கு போட்டியாக இது உருவாக்கப்படுகின்றது என்ற கருத்தும் உள்ளது.
கொழும்புதுறைமுக நகரத்தின் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட சீன நிறுவனத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே டேவிட்கமரூன் இணைத்துக்கொள்ளப்பட்டார் என இலங்கையின் முதலீட்டு விவகாரங்களிற்கான அமைச்சர் டிலும் அமுனுகம பொலிட்டிக்கோவிற்கு தெரிவித்துள்ளார்.
டேவிட் கமரூன் அபுதாபியில் 100 பேர் கலந்துகொண்டிருந்த நிகழ்விலும் துபாயில் 300 பேர் கலந்துகொண்டிருந்த நிகழ்விலும் தமது உரையை ஆற்றியிருந்தார்.
இது முற்றுமுழுதாக சீனாவின் திட்டமில்லை – இது இலங்கையின் திட்டம் என்பதை டேவிட்கமரூன் வலியுறுத்த முனைந்தார் என தெரிவித்துள்ள திலிம் அமுனுகம சீனாவும் அவர் அதனையே வலியுறுத்தவேண்டும் என விரும்பியிருக்கலாம் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.