இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் IMF
இலங்கைக்கு இரண்டாம் தவணை கடன் கொடுப்பனவை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
தமது நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் பரிசீலனையின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வு முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம்
அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன், இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை வழங்கப்படும் மொத்த நிதி உதவித் தொகை 660 மில்லியன் டொலர்களாகும்.