;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக இடம்பெற்ற மோசடி அம்பலம்

0

தாய்லாந்து, டென்மார்க், மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொக்கட்டிச்சோலை பகுதியில் மோசடியில் ஈடுபட்ட மூவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்ற நிலையில் வெளிநாடு செல்வதற்கு பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள், மட்டக்களப்பு காட்டுக்கந்தோர் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் பணத்தினை பெற்றுத் தருமாறு கோரி ஒன்றுகூடியயுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்தினால் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம், 100 வீதம் நம்பிக்கை என கூறி தாய்லாந்து, டென்மார்க் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என கூறி 188 நபர்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தாய்லாந்திற்கு ஒருவருக்கு 450,000/- ரூபா என 22 நபர்களிடமும் டென்மார்க்கிற்கு ஒருவருக்கு 550,000/- ரூபா என 20 நபர்களிடமும் துபாய்க்கு ஒருவருக்கு 350,000/- ரூபா என 146 நபர்களிடமும் மொத்தமாக 7 கோடியே 20 இலட்சம் ரூபாய் (72,100,000) பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வெளிநாடு அனுப்புவதாக கூறி கொழும்பிற்கு அழைத்து சென்று 42 நபர்களை விட்டுவிட்டு முகவர்கள் மூவரும் செவ்வாய்க்கிழமை துபாய் நாட்டிற்கு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசடி நிலையினை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனை அடுத்து இன்றைய தினம் குறித்த மூன்று முகவர்களும் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று முகவர்களிடமும் தாங்கள் வழங்கிய பணத்தினை பெற்று தருமாறு கோரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.