;
Athirady Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுடன் 22 வயது

0

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்துள்ளது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கூட்டு ஒப்பந்தம் தமிழ்தேசியகூட்டமைப்பாக கையொப்பம் இடப்பட்டது.

இந்த கையொப்பம் நான்கு கட்சி செயலாளர்கள் இடப்பட்ட திகதியான 2001, அக்டோபர்,20ஆம் திகதியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவான நாளாக உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணியாக செயல்பட்டதால், சார்பாக அந்த கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த இரா. சம்மந்தன், தமிழீழவிடுதலை இயக்கம், சார்பாக அப்போது அந்த கட்சியின் செயலாளநாயகமாக இருந்த ந.ஶ்ரீகாந்தாவும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சார்பாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரமச்சந்திரனும், அகில இலங்கைத்தமிழ் காங்கிரஷ் சார்பாக செயலாளர் ந.குமரகுருபரனும் கையொப்பம் இட்டனர்.

இதன்போது தமிழர் விடுதலைக்கூட்டணி எனும் அரசியல் கட்சியில் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் வேட்பு மனுக்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது பொதுத்தேர்தல் (12.06.2001)இல் இடம்பெற்றது.

விடுதலைப்புலிகள் நிர்வாகம்
அந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகமாக அப்போது செயல்பட்ட இரா.சம்மந்தனால் வேட்பு மனுக்களில் கையொப்பம் இடப்பட்டன.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 348,164, வாக்குகளை பெற்று 14, உறுப்பினர்களுடன் 01, தேசியபட்டியல் உறுப்பினருமாக 15, பேர் நாடாளுமன்றம் சென்றனர்.

2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் 70 சத வீத நிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் ஒரு நடைமுறை அரசையும் விடுதலைப்புலிகள் நிர்வாகம் செய்து வந்த காலமாகும்.

அதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் கூடிய நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்க வேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முன்மொழியப்பட்டபோது 15 பேரில் 14 பேர் அதனை ஏற்றனர். ஒருவர் மட்டும் ஏற்கமுடியாது என கூறினார் அவர் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக தெரிவான வீ.ஆனந்தசங்கரி ஆவார்.

அடுத்த தேர்தலுக்கான வர்த்தமானி
இதனால் நாடாளுமன்ற குழுவில் முரன்பாடு ஏற்பட்டு வீ.ஆனந்தசங்கரி தனித்து செயல்பட்டார்.

இந்நிலையில் 2004 பெப்ரவரியில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வீ. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிலரை அவர் பக்கம் எடுத்து விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதனால், 2004 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தையும், தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியையும் பயன்படுத்த முடியாது என வீ.ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார்.

இதனால், கிளிநொச்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சி தலைவர், செயலாளர்களை அழைத்த விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுமாறு கட்டளை இட்டார்.

2004.04.08இல் இடம்பெற்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியிலும் அதன் வீட்டுச்சின்னத்திலும் போட்டியிட்டு மீளக் கொண்டு வந்தார்கள். 2004 633,654 வாக்குகளைப்பெற்று 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரித்திரத்தில் முதல்தடவையாக வடக்கு கிழக்கில் இருந்து தெரிவாகினர்.

2004,தொடக்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த 2020,பொதுத்தேர்தல் வரையும் இலங்கைத்தமிழ் அ்ரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் அனைத்து தேர்தல்களையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல் விபரம்:
2001 இல் 348164 வாக்குகள்: 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2004 இல் 633654 வாக்குகள்: 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2010 இல் 233,190 வாக்குகள்: 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2015 இல் 515,963 வாக்குகள்: 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
2020 இல் 327,168 வாக்குகள்: 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.