கந்தளாயில் புத்தர் மீது கைவைத்தவர் கைது!
புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான நபரிடமிருந்து இரும்பு சுற்றியலையும் பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.