வலுக்கும் இஸ்ரேல் பலஸ்தீன போர்: காசா எல்லையில் காத்திருக்கும் 200 லொரிகள்
காசா ரபா எல்லையில் நிவாரணப் பொருட்களுடன் 200 லொரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து 15 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும் உள்ளனர் .
இதில் அதிகமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
200 லொரிகள்
இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கே மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.
இதனை கருதிற்கொண்டு பல நாடுகள் மனிதாபிமான உதவிகளை செய்ய முன் வந்துள்ள நிலையில் எகிப்தும் உதவி செய்ய முன்வந்தது.
அதனை வழங்க இஸ்ரேல் அனுமதிக்காது தடுத்து வைத்திருந்த நிலையில் தற்போது அனுமதித்துள்ளது.
எனினும் தாக்குதல்களினால் ரபா எல்லை சேதமடைந்துள்ளதால்,ரபா எல்லையில் நிவாரண பொருட்களுடன் 200 லொரிகளும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.