;
Athirady Tamil News

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல் : ரவூப் ஹக்கீம் கண்டனம்

0

சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வு துறையுடன் இணைந்து செயற்பட்டவர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கருத்துரைக்கையில்,

யுத்தக்குற்றம்
“தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களுக்கு பின்னர் பேராயார் கர்தினாலை நாங்கள் சந்தித்தபோதும் இஸ்ரேலின் கூலிப்படையினரே இதற்கு பின்னணியில் இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதனால் கிறிஸ்தவர்களை கொலை செய்ய முஸ்லிகளுக்கு என்ன தேவை இரு்கிறது. இஸ்ரேல் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரிசலை ஏற்படுத்தவே இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் பலஸ்தீனில் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் மூலம் யுத்தக்குற்றத்தை மேற்கொண்டுள்ளது. பலஸ்தீனில் 2,2 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான முறையில் தாக்கப்படுகின்றனர்.

பெண்கள், முதியோர், சிறுவர் என கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பலஸ்தீன் மீது தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டிருக்கிறது.

இன அழிப்பு
இவ்வாறான நிலையில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தைமீறி செயற்பட்டு வருவதை உலக நாடுகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. அத்துடன் இஸ்ரேலின் இந்த தாக்குதலை இன அழிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்.

காஸா பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தவே முயற்சிக்கின்றனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தை நிறுத்த அழுத்தம் கொடுக்குமாறு அந்த அரசாங்கங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுளளது.

மேலும் இந்த மோதல் காரணமாக பாரிய தாக்கத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் இந்த மோதலை நிறுத்துவதற்கு உலக நாடுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஹமாஸ் குழுவின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு துறையில் பாரிய குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளன.

அதேநிலையில் ஹமாஸின் தாக்குதலால் பலஸ்தீன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்த மோசமான கூற்றே ஹமாஸ் தாக்குதல் நடத்த காரணமாகும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.