காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை
இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4,000ஐ கடந்துள்ள நிலையில் இலங்கைப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை காசாவில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்க என்ற இலங்கைப்பெண்ணின் சடலம் கூடிய விரைவில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.