மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம்
பதுளை கொஸ்லந்த மீரிபெத்த பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ..ஜே. பிரியங்கணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்டிட ஆய்வு நிறுவனத்தினால் இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் தோட்ட குடியிருப்புகளில் வசித்து வந்த 27 குடும்பங்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் கோரிக்கை
மேலும் ஹப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளிலும் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் மண் சரிவு காரணமாக பதுளை கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டில் மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 14 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.