ஓமான் வளைகுடாவில் பதிவான நிலநடுக்கம்
ஓமான் கடலில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஓமான் நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் (EMC) தெரிவித்துள்ளது.
திடீரென நேற்று(21)ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாகவும் ஓமான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து தடை
இது குறித்து சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலநடுக்க கண்காணிப்பு மையம் (EMC) தெரிவிக்கையில், ஓமான் கடலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் 5 கீலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், குறித்த நிலநடுக்கம் தெற்கு அல் ஷர்கியாவில் உள்ள சூர் விலாயாத் பகுதியில் இருந்து வடகிழக்கே 57 கீலோ மீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளதாகவும் நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதா நிலையில் நில அதிா்வுகள் உணரப்பட்ட பகுதிகளில் பாதிப்புகளைக் கண்டறிவதற்காக போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.