;
Athirady Tamil News

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொரு இந்தியர்… சுந்தர் பிச்சையை விடவும் கோடீஸ்வரர்: யாரவர்?

0

கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் குரியன் என்பவரே உலகின் இரண்டாவது பணக்கார இந்திய மேலாளர் என கூறப்படுகிறது.

தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த Thomas Kurian தமது இரட்டையரான சகோதரருடன் மட்ராஸ் ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்புக்கு இணைந்துள்ளார்.

ஆனால் இருவரும் திடீரென்று என்ன முடிவெடுத்தார்களோ, பாதியிலேயே IIT Madras-ல் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் Princeton பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு சேர்ந்துகொண்டனர்.

பின்னர் Stanford பல்கலைக்கழகத்தில் இருந்து தாமஸ் குரியன் MBA பட்டம் பெற்றார். தொடர்ந்து McKinsey and Company நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 1996ல் ஆரக்கிள் நிறுவனத்தில் சேர்ந்தபோது, ​​அது அவரது தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

2018ல் கூகுள் நிறுவனம்
2018ல் அங்கிருந்து வெளியேறி, கூகுள் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் தாமஸ் குரியன். இவரது முயற்சியால் கூகுள் கிளவுட் மீண்டும் வெளிச்சம் காணத் தொடங்கியது. விற்பனை குழுவினரின் ஊதியத்தை அதிகப்படுத்தினார். அத்துடன் ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார்.

ஆரக்கிளில் இவரது தயாரிப்புகள் விற்பனையில் 35 பில்லியன் டொலர்களை ஈட்டியது. தாமஸ் குரியனின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ.15,800 கோடி என்றே கூறப்படுகிறது.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பை தாமஸ் குரியன் முந்தியுள்ளார் என்றே கூறுகின்றனர். 2022ல் மட்டும் கூகுள் கிளவுட் நிறுவனம் சுமார் 26.28 பில்லியன் டோலர்களை ஈட்டியுள்ளது. அதாவது கூகுள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 9.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.