இதில் எங்களுக்கு பங்கில்லை…. இஸ்ரேலுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஐரோப்பிய யூத சமூகம்
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதல் தொடுத்ததும், மேற்கத்திய நாடுகள் வரிசையாக கண்டனம் தெரிவித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் வரிசையாக களமிறங்கியது, இறுதியில் என்னவாக முடியும் என தெரியும் என குறிப்பிட்டுள்ளார் பிரபல இஸ்ரேலிய இசைக்கலைஞர்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவு
இஸ்ரேலில் பிறந்த யூத இசைக்கலைஞரான Jonathan Ofir தெரிவிக்கையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பழிவாங்குவதை விட இஸ்ரேலுக்கு கொடூரமான படுகொலைகளை செய்ய காரணமாக அமைந்தது என்றார்.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் 1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இதனையடுத்து ஹமாஸ் படைகளுக்கு எதிராக போரை அறிவிக்க முடிவு செய்தார் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இதனையடுத்து காஸா பகுதி மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், இதுவரை 5,100 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பதினைந்து நாட்களுக்குள் காஸா நிலப்பரப்பின் பெரும்பகுதி இடிபாடுகளாக சிதைந்தது. மேலும், ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை என பாலஸ்தீனத்தில் கொல்லப்படுவதாக தொண்டு நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு பங்கில்லை
இந்த நிலையிலேயே Jonathan Ofir உட்பட பல எண்ணிக்கையிலான ஐரோப்பாவில் வசிக்கும் யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
கிளாஸ்கோவிலிருந்து லண்டன், பாரிஸ் முதல் பார்சிலோனா வரை, திரளான யூதர்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் காசா மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் கொலைவெறி தாக்குதல்களில் தங்களுக்கு பங்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.