;
Athirady Tamil News

பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

0

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ எண்ணத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையில் பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ நசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகை ஆரம்ப நிகழ்வு திங்கட்கிழமை (23) நடை பெற்றது.

இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பெறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர் விஜயவர்த்தன மற்றும் பொலிஸ் உத்தியோகத்தகர் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் இத் திட்டத்தினை முன்னெக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் பல இடங்களில் நடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.