ஈரானிற்கு பைடன் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!
கடந்த வாரம் ஈராக்கில் 12 தடவையும் சிரியாவில் 4 தடவையும் அமெரிக்க படையினர் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக, அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு அதிபர் ஜோபைடன் நேரடி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நேரடி எச்சரிக்கை
ஈரானின் மத தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கான நேரடி செய்தியில் பைடன் இதனை தெரிவித்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தியொன்று தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
900 அமெரிக்க படையினர் பிராந்தியத்தில் உள்ளனர் எனவும், பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில் அங்குள்ள அமெரிக்க படையினரை பாதுகாப்பதற்காக வான்வெளிப்பாதுகாப்பை வலுப்படுத்த சென்றுள்ளனர் எனவும் பென்டகன் குறிப்பிட்டுள்ளது.