சற்றுமுன் கொழும்பில் பாரிய தீ விபத்து
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.
புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தீ விபத்தில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.