மாற்றமடையவுள்ள கொழும்பு நகரம்
மழை காரணமாக நீரில் மூழ்கக் கூடிய கொழும்பு நகரில் உள்ள 20 இடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தாழ்நில பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தீ விபத்து
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றி அவர்களுக்கு புதிய வீடுகளை வழங்குவது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த 27ஆம் திகதி காலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 6 பேர் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.