ஆசிரியர் கலாசாலை புனித மரியன்னை சிற்றாலயத்தில் பெருநாள் திருப்பலி
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி 27.10.2023 வெள்ளி காலை 9 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கலாசாலையின் கிறிஸ்தவ மன்ற ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
யாழ் மறைக்கோட்ட முதல்வரும் யாழ் பேராலய பங்குத் தந்தையுமாகிய அருட்பணி ஜே ஜே மௌலிஸ் அடிகளாரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
கோப்பாய் பங்குத்தந்தை எம் எல் மொன்பேட் அடிகள் பெருநாள் திருப்பலியில் கலந்து ஆசி வழங்கினார். கலாசாலை அதிபர் ச லலீசன் திருப்பலி நிறைவுரை ஆற்றினார்