பயங்கர பரபரப்பு; தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – கூடும் ஈபிஎஸ், ஓபிஎஸ்!
முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
தொடர்ந்து, முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முத்துராமலிங்க தேவரின் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
அரசியல் தலைவர்கள் மரியாதை
அமைச்சர்கள், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோரும் இதில் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
அதனையடுத்து, ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மாியாதை செலுத்துகின்றனர்.
அதேபோல் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், அன்வர் ராஜா, மணிகண்டன் உள்ளிட்டோரும் வருகை தரவுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், சசிகலா, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.