அடுத்தடுத்து குண்டு வெடிப்பு; பதறிய மாநிலம், இதனால்தான் செய்தேன் – சரணடைந்த நபர் பகீர் தகவல்!
மத வழிபாட்டு கூடத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
குண்டு வெடிப்பு
கேரளா, எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அபோது மர்ம பொருளொன்று அதீத சத்தத்துடன் வெடித்தது.
அதற்கடுத்த சில நிமிடங்களில், கூட்டம் நடந்த அரங்கத்தில் வேறு இரண்டு இடங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் மற்றும் சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வாக்குமூலம்
உடனே, போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார்.
குண்டு வெடிப்பை நிகழ்த்திய பிறகு இவர் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் பெயர் மார்ட்டின். Jehovah Witnesses group-ல் அமைப்பால் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு என்பது தவறானது என உணர்ந்தேன்.
இதன் போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். இதுபற்றி அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். மேலும் தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து தங்களின் கொள்கைகளை போதித்தனர். இதனை நான் எதிர்க்கிறேன்.
குண்டு வெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்ற விபரங்களை செய்தி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது. ஏனென்றால் இது ஒவ்வொரு சாமானியனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.
One man named Dominic Martin through a Facebook Video has taken responsibility for the Kerala bomb blasts. He has claimed he is part of the same Christian group which had organised the event. His claims are being verified by the Kerala Police. Joint investigation by NIA & Police. pic.twitter.com/AUXc6fOy1K
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 29, 2023