மயங்கி வீழ்ந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – யாழில் சம்பவம்
தலைவிறைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த நிலையில், சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார்.
குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது-10) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் இந்த மாணவி கடந்த 21ஆம் திகதி தலைவிறைப்பு ஏற்பட்டு மயங்கி வீழ்ந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார். மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.