கலப்பட இனிப்புப் பண்டங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்திய உணவுப் பாதுாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லியில் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி கமலா வா்தன ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையின்போது இனிப்புப் பண்டங்கள் அதிகம் வாங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்களைக் கண்டறிந்து, அவற்றின் விற்பனையைத் தடுக்க சில்லறை விற்பனையகங்கள், இனிப்புப் பண்ட தயாரிப்பு நிறுவனங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநில அளவில் உள்ள 4,000 எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பால் மற்றும் பால் பொருள்களின் தரத்தைக் கண்டறிய தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம், இந்திய தர கவுன்சில் ஆகியவை கூட்டாக ஆய்வு மேற்கொண்டுள்ளன. இந்த ஆய்வில் சுமாா் 10,000 பால் மற்றும் பால் பொருள்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்தாா்.