உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கம்!! பரபரப்பை அதிகரித்த சீனா நிறுவனங்கள்!!
நடந்த வரும் இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையேயான போருக்கு மத்தியில், தற்போது சீனா இஸ்ரேல் நாட்டை ஆன்லைன் மேப்புகளில் இருந்து நீக்கியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏவுகணை தாக்குதலில் தொடர்ந்து இருநாடுகளும் காசா நகரை மையமாக வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், உலக நாடுகள் பலதும் பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இரு நாடுகளும் போரை கைவிட்டு சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நாடுகள் தொடர்ந்து தாக்குதலை மும்முரமாக மேற்கொள்கின்றன.
நீக்கிய சீனா நிறுவனங்கள்
இந்நிலையில், சீனாவின் முன்னணி அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணையதள பக்கத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் சீனா அந்நாட்டை ஆதரிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.