குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்: பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்
லங்கா சதொச நிறுவனம் இன்று (02) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் நடைமுறை
இந்த விலை குறைப்பு இன்று(20) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையில் இன் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு, 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கிராம் உள்ளூர் பாசிப்பயறு, 99 ரூபாவால் குறைக்கப்பட்டு, 998 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
400 கிலோகிராம் பால்மாவின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டு 948 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.