அடுத்த ஐடி ரெய்டு வலையில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலு; காரனமே இதுதானாம்.. பரபரக்கும் திமுக!
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருவதால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஐடி ரெய்டு
இந்த சோதனை 40 இடங்களில் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போதே எ.வ.வேலு மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.