;
Athirady Tamil News

இந்திய கோடீஸ்வர நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழர்

0

இந்திய நாட்டின் பெரிய கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.

கடந்த நிதியாண்டில் நம் நாட்டில் அதிகம் நன்கொடை வழங்கிய முதல் நன்கொடையாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தமிழர் ஒருவரே முதல் இடத்தை பிடித்துள்ளார் இதன்படி, 2022-23ஆம் நிதியாண்டுக்கான முதல் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் எச்.சி.எல். டெக்னொலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான சிவசுப்பிரமணியம் நாடார் என்ற, ஷஷிவ் நாடார் முதல் இடத்தில் உள்ளார்.

நன்கொடையாளர் பட்டியல்
இவர் கடந்த நிதியாண்டில் 2,042 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை இந்த பட்டியலில் ஷஷிவ் நாடார் முதலிடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி முதல்10 நன்கொடையாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி, இந்தியாவின் முதல் 10 நன்கொடையாளர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரும், அதானி குழும தலைவருமான கவுதம் அதானி இரண்டு இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார் இவர் கடந்த நிதியாண்டில் 285 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.