மூழ்க போகும் சென்னை – வெளியான திடுக்கிடும் தகவல்!
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சாலைகளில் மழை நீரில் மூழ்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ள அபாயத்தில் சென்னை
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
முன்பெல்லாம் மழை பெய்தாலே நகரில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது நிலைமை முன்பை காட்டிலும் தற்போது பரவாயில்லை என்றே மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெருநகர சென்னையின் முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகளில் இன்னுமே சுமார் 50.6% வெள்ள அபாயத்தில் உலக வங்கி உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறியும் மாநகராட்சி
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை eco-zones ஆகச் சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் புதிய கட்டுமானங்கள் ஊக்குவிக்கப்படாது.
சென்னையின் மூன்றாவது வளர்ச்சி பிளான் குறித்த ஆவணம் தயாரிக்கும் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2022இல் உலக வங்கி நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய முக்கியமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை அடையாளம் காண உதவியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அதில் தான் 50% arterial சாலைகள் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது மாங்காடு அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
இதனால் எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், அடையாறு படுகை, கூவம் படுகை மற்றும் கோவளம் படுகையில் உள்ள சாலைகளிலும் வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், “நீர்நிலைகள், தாழ்வான பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்த பகுதிகளை eco-zonesஆக அறிவிக்க வேண்டும்.
இந்த இடங்களில் புதிய வளர்ச்சி திட்டங்களை ஊக்குவிக்கக் கூடாது.. இந்த இடங்கள் நீர்நிலையை ரீசார்ஜ் செய்யும் திறன் கொண்ட திறந்தவெளியாகவே இருக்க வேண்டும்.
இப்படி நீர்நிலைக்குத் தண்ணீரை ரீசார்ஜ் செய்யும் இடங்களை Sponge City என்பார்கள். சென்னையில் மொத்தம் 50 இடங்களில் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதை உருவாக ஆகும் செலவும் குறைவு” என்கின்றனர்.