பத்தே நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்
உடல் எடையை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக இருக்கவும் வெள்ளை பூசணிக்காய் ஜூஸை குடித்து வரலாம்.
வெள்ளை பூசணிக்காய் ஜூஸை குடிப்பதால் நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
மேலும் ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
தொப்பையை குறைக்க வெள்ளை பூசணிக்காய்
பூசணிக்காய் சாறில் மெட்டபாலிசம் இருப்பதால் இது வயிற்று கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது.
இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால், அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பூசணிக்காய் ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் வேகமாக தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது.
பூசணிக்காயில் உள்ள குறைவான கலோரி, எடை குறைப்புக்கு பெரிதளவில் உதவுகிறது.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி எடை குறைப்பிற்கு சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த செய்கிறது.
பூசணிக்காய் சாற்றில் உள்ள வைட்டமின், ஜிங்க், மினரல் மற்றும் என்சைம் ஆகியவை, கொழுப்பை குறைக்க பெரிதளவில் உதவுகிறது.
உடற்பயிற்சியுடன் சேர்த்து பூசணிக்காய் ஜூஸை குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைத்திட பயன்படுகிறது.