;
Athirady Tamil News

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு வருகிறது முதற்கட்ட பணம்

0

உயர் பருவ நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தின் முதற்கட்டமாக 100 கோடி ரூபா மாவட்ட செயலகங்களின் கணக்குகளில் இன்று (06) வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து விவசாயிகளுக்கும் ஹெக்டேருக்கு 15,000 ரூபாய் நிதி மானியமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இப் பருவத்தில் எட்டு இலட்சம் ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், நெற்செய்கை மேற்கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிதி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு, அரசாங்கம் அதற்காக 1200 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பம்
மேலும், 2023 ஆம் ஆண்டு விவசாயத்திற்காக 132 பில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும், 2024 ஆம் ஆண்டு நெல் பயிர்செய்கை என்பவற்றிற்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்தால் அதிக பணம் வழங்கப்படும் என்றும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இதற்கு முன்னரே நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.